2035இல் கச்சா தேவை 14% அதிகரிக்கும்: ஐ.ஈ.ஏ.

புதன், 9 நவம்பர் 2011 (16:47 IST)
இப்போதுள்ள நிலையில் மாற்று எரிபொருள் கண்டுபிடிக்காவிட்டால் அடுத்த கால் நூற்றாண்டுக் காலத்தில் உலகின் கச்சா எண்ணெய் தேவை 14 விழுக்காடு அதிகரிக்கும் என்றும், அதன் காரணமாக கச்சா எண்ணெணையின் விலை பீப்பாய்க்கு 120 டாலராக உயரும் என்றும் பன்னாட்டு எரிசக்தி முகமை (International Energy Agency - IEA) கூறியுள்ளது.

2010ஆம் ஆண்டு மதிப்பீட்டின் படி உலக கச்சா எண்ணெய் பயன்பாடு நாள் ஒன்றிற்கு 87 மில்லியன் பீப்பாய்களாக இருந்தது. அது 2035இல் 99 மில்லியன் பீப்பாய்களாக அதிகரிக்கும் என்று ஐ.ஈ.ஏ. கூறியுள்ளது.

பொருளாதார வளர்ச்சி, மக்கள் தொகை அதிகரிப்பு ஆகிய இரண்டு காரணிகளாலும் எண்ணெய் தேவை இந்த அளவிற்கு அதிகரிக்கும் என்று அவ்வமைப்பு கூறியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்