ஸ்மார்ட்போன் விற்பனை அதிகரிப்பு; மொபைல் விற்பனை 22 கோடி

புதன், 3 ஏப்ரல் 2013 (15:28 IST)
FILE
ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகரித்ததால் கடந்த ஆண்டில் ஒட்டுமொத்த மொபைல் போன்களின் விற்பனை 22 கோடியை தாண்டியது.

இதுகுறித்து சைபர்மீடியா ரிசர்ச் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், ஆசியாவின் 3 வது மிகப்பெரிய பொருளாதார நாடான இந்தியாவில், 2011 ஆம் ஆண்டில் 18 கோடியே 34 லட்சம் மொபைல் போன்கள் விற்பனையானது. அப்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை வெறும் 7 சதவீதமாக மட்டும் இருந்தது.

ஆனால், 2012 ஆம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களின் விற்பனை 35.7 சதவீதமாக அதிகரித்தது. இதனால் ஒட்டுமொத்த மொபைல் போன்களின் விற்பனை 22 கோடியே 16 லட்சமாக உயர்ந்தது. இதில் ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை மட்டும் 1 கோடியே 52 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல், பல்வேறு வசதிகள் கொண்ட மொபைல் போன்களின் விற்பனை 19.9 சதவீதம் உயர்ந்து 20 கோடியே 64 லட்சமாக இருந்தது. முந்தைய ஆண்டில் இதன் விற்பனை 17 கோடியே 22 லட்சமாக இருந்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்