வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,300 குறைந்தது

சனி, 1 அக்டோபர் 2011 (17:24 IST)
வெள்ளி இருப்பு வைத்திருந்த வியாபாரிகள் விற்கத் தொடங்கியது அடுத்து டெல்லி தங்கச் சந்தையில் இன்று ஒரு நாளில் வெள்ளியின் விலை கிலோவிற்கு ரூ.1,300 குறைந்து ரூ.53,000 சரிந்துள்ளது.

ஆயினும், தங்கத்தின் விலை குறையாமல் நேற்றைய விலையான ரூ.26,640லேயே (10 கிராம்) நீடிக்கிறது. நியூ யார்க் சந்தையிலும் இதேபோல் வெள்ளியின் விற்பனை அதிகரித்ததால் விலை குறைந்தது.

வெள்ளி நாணயங்களின் விலை ரூ.2,000 குறைந்து ரூ.58,000 ஆகியுள்ளது. தங்கத்தின் விலை நிலவரம் வருமாறு:

99.5 விழுக்காடு தூயத் தங்கம் (10 கிராம்) ரூ.26,500.00
99.9 விழுக்காடு தூயத் தங்கம் (10 கிராம்) ரூ.26,640.00

சவரன் விலை (8 கிராம்) ரூ.21,700.00

வெப்துனியாவைப் படிக்கவும்