வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்

வெள்ளி, 20 செப்டம்பர் 2013 (15:48 IST)
FILE
குறுகிய கால கடன்களுக்கான வட்டியை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளதால் வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது.

வட்டி விகிதம் உயர்த்தப்படாது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலாண்டு நிதிநிலை ஆய்வு அறிக்கையை ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்டது. குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை கால் சதவீதம் உயர்த்தியுள்ளதாக ஆய்வு அறிக்கையை வெளியிட்ட ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் அறிவித்தார்.

ஆனால் வங்கிகளுக்கான ரொக்க கையிருப்பு விகிதத்தில் மாற்றம் ஏதும் இல்லை என்று கூறிய அவர், வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை கால் சதவீதம் அதிகரித்துள்ளதாகவும் கூறினார். இதனால் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் ஆறரை சதவீதகமாக உயர்ந்துள்ளது என்று ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகனம் மற்றும் தனி நபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்கிறது.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியானவுடன் பங்குச்சந்தைகளில் வீழ்ச்சி ஏற்படத் தொடங்கியது. நிஃப்டி 150 புள்ளிகளும், சென்செக்ஸ் சுமார் 490 புள்ளிகளும் சரிவை சந்தித்தன. தங்கத்தின் விலையில் பெரிய மாற்றம் ஏதும் ஏற்படவில்லை.

ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.19 உயர்ந்தது. சவரன் ஒன்று ரூ.22,880ஆக விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.0.40 அதிகரித்து ரூ.55ஆக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்