விஸ்கோஸ் நூல் மீது குவிப்பு வரி

செவ்வாய், 21 ஜூலை 2009 (12:06 IST)
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் விஸ்கோஷ் ரேயான் நூல் மீது கிலோவுக்கு 11.38 டாலர் குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து அதிக அளவு இறக்குமதி செய்யப்படுவதால், உள்நாட்டு விஸ்கோஸ் நூற்பாலைகள் பாதிக்கப்படுகின்றன. உள்நாட்டு நூற்பாலைகளின் நலனை காக்கவே குவிப்பு வரி விதிக்கப்படுவதாக குவிப்பு வரி- இதர வரிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சீனா, வியட்நாமில் இருந்து, அந்த நாடுகளின் உள்நாட்டில் விற்பனை செய்யப்படுவதை விட, குறைந்த விலைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் உள்நாட்டு தொழில் பாதிக்கப்படுகிறது.

விஸ்கோஷ் நூலின் ரகத்தை பொறுத்து, 1 கிலோவுக்கு 4.72 டாலர் முதல் 11.38 டாலர் குவிப்பு வரி விதிக்கப்படுவதாக நிதி அமைச்தகத்தின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு முன் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் துணி, நூல், கலர் பிக்ஸர் டியூப், அலுமினிய பொருட்கள், இரசாயண பொருட்கள் மீது குவிப்பு வரி விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்