வட்டி விகிதம் குறைப்பு, முதலீடுகளை ஊக்குவிக்கும் - பிரணாப்

செவ்வாய், 17 ஏப்ரல் 2012 (17:11 IST)
கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைத்திருப்பது, முதலீட்டை ஊக்குவிக்கும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பிரணாப், மத்திய அரசு வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் எடுத்துவருவதாகவும், விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், ரிசர்வ் வங்கி கடனுக்கான வட்டி விகிதத்தை குறைத்திருப்பது முதலீடுகளை ஊக்குவிக்கும் எனவும் தெரிவித்தார்.

இதேபோன்று, பெங்களுரில் செய்தியாளர்களை சந்தித்த திட்டக்குழு துணைத்தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, ரிசர்வ் வங்கியின் இந்த முடிவு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி வகுக்கும் என்று கூறியுள்ளார்.

News Summary:
The Reserve Bank’s decision to cut lending rate by 0.50 per cent will encourage investments, Finance Minister Pranab Mukherjee said, while assuring the government will also take additional steps to boost growth and control price rise.

வெப்துனியாவைப் படிக்கவும்