வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்புக்கு அபராதம் இல்லை

செவ்வாய், 1 ஏப்ரல் 2014 (13:02 IST)
வங்கி கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை குறைவாக இருந்தாலோ, கணக்கு இயக்கப்படாமல் இருந்தாலோ அபராதம் விதிக்கப்பட மாட்டாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
இதுவரை வங்கிக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு தொகை குறைவாக இருந்தாலோ, அல்லது கணக்கு தொடர்ந்து இயக்கப்படாமல் இருந்தாலோ அபராதம் விதிக்கப்பட்டு வந்தது. இனி இத்தகு முறை மாற்றப்படும்  என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மேலும் கடன்களை முன்னாதாக கட்டி முடிப்பதற்கு வசூலிக்கப்படும் கட்டணமும் இனி வசூலிக்கப்படாது என்று 2014 - 15 ஆம் ஆண்டுக்கான ரிசர்வ் வங்கியின் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
ரெப்போ வங்கிகளுக்கான குறுகிய கால கடன்களின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை எனவும் குறுகிய கால கடன் வட்டி விகிதம் 8% ஆகவும், வங்கிகளின் ரொக்க கையிருப்பு விகிதம் 4% ஆகவும் நீடிக்கும் என அறிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்