ரூ6,000 கோடி கடனை அடைத்தது ரிலையன்ஸ்

செவ்வாய், 2 ஜூலை 2013 (15:14 IST)
FILE
கடந்த 2007ம் ஆண்டு, சர்வதேச வங்கிகளிடம் இருந்து ஒரு பில்லியன் அமெரிக்க டாலரை (ரூ6,000 கோடி) கடனாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் பெற்றது. இந்நிலையில், ஜூன் மாதத்துடன் முடிந்த காலாண்டில் இந்த கடன் முழுவதையும் திரும்ப செலுத்திவிட்டதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் தெரிவித்துள்ளது.

இதுதவிர சில வங்கிகளிடம் இருந்து வெளிநாட்டு கரன்சிகள் அடிப்படையில் பெறப்பட்ட ரூ1,200 கோடி கடனையும் விரைவில் செலுத்துவதற்கான அட்டவணையை தயாரித்துள்ளதாகவும், இந்த கடன் தொகை முழுவதும், நிறுவனத்தின் ரூபாய் ஆதாரத்தில் இருந்து செலுத்தப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து, அதன் பங்குகள் விலை 5.50 சதவீதம் உயர்ந்து ரூ124.60 ஆக உயர்ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்