மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு

வியாழன், 1 ஆகஸ்ட் 2013 (13:44 IST)
FILE
பெட்ரோல், டீசல் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது. கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் விலை 5வது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 70 பைசாவும், டீசல் விலை 50 பைசாவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சரிவடைந்து வருவதால் பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஜூன் 1 ஆம் தேதி 75 பைசாவும், ஜூன் 16 ஆம் தேதி ரூ.2ம், ஜூன் 29 ஆம் தேதி ரூ.1.82ம், ஜூலை 15ம் தேதி ரூ.1.55ம் உயர்த்தின. இந்நிலையில் நேற்று ஐந்தாவது முறையாக லிட்டருக்கு 70 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2 மாதங்களில் பெட்ரோல் மொத்தத்தில் ரூ.6.82 விலை உயர்த்தப்பட்டுள்ளது.

டீசல் விற்பனை மூலம் எண்ணெய் நிறுவனங்களுக்கு லிட்டருக்கு ரூ.9.29 இழப்பு ஏற்படுவதால் டீசல் விலையும் 50 பைசா உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை வாட் வரி மற்றும் உள்ளூர் வரிகள் சேர்ந்தால் சென்னையில் 84 பைசா உயர்ந்து லிட்டர் ரூ.74.49 ஆகவும், மும்பையில் ரூ.78.91 ஆகவும், டெல்லியில் ரூ.71.28 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.78.64 ஆகவும் இருக்கும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்