புதிய ஃபியஸ்டாவைக் களமிறக்கிய ஃபோர்ட்

வியாழன், 15 மார்ச் 2012 (18:45 IST)
முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்ட் இந்தியா, ஃபியஸ்டா காரின் புதிய பதிப்பை இந்திய கார் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மாடல் 1500 சிசி திறனுள்ள இன்ஜின் வகையில் ஏம்பியன்ட், டைட்டானியம் பிளஸ், ஸ்டைல் ஏடி, டைட்டானியம்+ எடி என நான்கு பெட்ரோல் பதிப்புகளாகவும் மற்றும் ஸ்டைல், டைட்டானியம் பிளஸ் என இரண்டு டீசல் பதிப்புகளாகவும் சந்தையில் வலம் வர உள்ளது புதிய மாடல் ஃபியஸ்டா கார்கள்.
FILE

புது டெல்லியில் இந்த புதிய வகை ஃபியஸ்டா கார் மாடலை அறிமுகப்படுத்தி பேசிய ஃபோர்ட் இந்தியா நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான மைக்கேல் போனேம், சந்தையில் ஏற்படும் மாற்றங்களுக்கும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கும் ஏற்ப ஃபோர்ட் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

ஓட்டுநருக்கான ஏர்பேக், டிரைவர் சீட்டின் உயரம் சரிப்படுத்தல், ஏபிஸ், எலக்ட்ரிக் போன்று பல கூடுதல் அம்சங்கள் புதிய ஃபியஸ்டாவில் சேர்க்கப்பட்டுள்ளன.

இதன் உயர் ரக மாடலான டைட்டானியம் பிளஸ்ஸில் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், க்ரூஸ் கண்ட்ரோல், புளூடூத் வாய்ஸ் கன்ட்ரோல், பார்க்கிங் உதவி, ஆட்டோ பவர் மிரர்கள் போன்ற சிறப்பான அம்சங்கள் அடங்கியுள்ளன.

சந்தைக்கு புதிதாக வருகை தந்துள்ள ஃபியஸ்டாவின் விலை ரூ.7.23 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சத்திற்கு இடையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு நிகரான பிற நிறுவன கார் மாடல்களுக்கு புதிய ஃபியஸ்டா மாடல் பெரும் சவாலாக அமையும் என்று வாகன ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் எட்டு புதிய கார் மாடல்களை அறிமுகப்படுத்த ஃபோர்ட் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

புகைப்பட‌ம்: நன்றி ஃபோர்ட் வலைத்தளம்

News Summary : Ford India introduced the 2012 Fiesta model. Ford Fiesta New model comes with six variants - two in diesel and four in petrol that include two automatic transmission versions. The automatic transmission on the Fiesta petrol is a dual clutch. New base variant Ambiente, priced at Rs. 7.23 lakh for the 1.5L Ti-VCT diesel and Rs 8.99 lakh (both ex-showroom, Delhi) for the 1.5L Duratorq TDCi Style.

வெப்துனியாவைப் படிக்கவும்