பிரேசிலில் பிரிக் நாடுகளின் கூட்டம்

வியாழன், 4 பிப்ரவரி 2010 (14:07 IST)
பிரிக் நாடுகளின் அடுத்த கூட்டம் பிரேசில் நாட்டின் தலைநகரான பிரசில்லாவில் நடைபெற உள்ளது.

பிரேசில், ரஷியா, இந்தியா,சீனா ஆகிய நான்கு நாடுகள் பிரிக் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. இந்த நாடுகளின் முதல் கூட்டம் 2009 ஜூன் மாதம் ரஷியாவில் உள்ள யகான்சர்ன்பக் நகரில் நடைபெற்றது. இதில் உலக வரத்த்கத்தின் அந்நிய செலவாணியாக அமெரிக்க டாலர் நீடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக வேறு நாணயத்தை உருவாக்க வேண்டும் என்று தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

இதன் அடுத்த கூட்டம் பிரசல்லாவில் வருகின்ற ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த கூட்டத்தில் சீன அதிபர் ஹு ஜின்டோ பங்கேற்பார் என்றும், இதை தொடர்ந்து அரசு முறை சுற்றுப்பயம் மேற்கொள்வார் என்று பிரேசில் நாளிதழ் எஸ்டாடோ டி சாவ் பாவ்லோ தெரிவித்துள்ளது.

பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள், அயலுறவு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டமும் நடைபெற உள்ளது. இதில் மூன்று நாடுகளுக்கு இடையே அரசியல், வர்த்தக உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த உள்ளனர்.

பிரிக் அமைப்பில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளான ஆசிய கண்டத்தை சேர்ந்த சீனா, இந்தியா, தென் ஆப்பிரிக்க கண்டத்தை சேர்ந்த பிரேசில், ஐரோப்பா கண்டத்தைச் சேர்ந்த ரஷியா ஆகியவை இடம் பெற்றுள்ளன.

உலக வர்த்தக அமைப்பு, சுற்றுச் சூழல், பொருளாதார நெருக்கடி உட்பட பல்வேறு விஷயங்களில், மேற்கண்ட நாடுகள் சர்வதேச அமைப்புகளில் இணைந்து செயல்படுகின்றன.



வெப்துனியாவைப் படிக்கவும்