பாரத ஸ்டேட் வங்கி டெபாசிட் வட்டியை உயர்த்தியது

செவ்வாய், 24 செப்டம்பர் 2013 (15:49 IST)
பொதுத்துறையில் முதலிடத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கி, 1 கோடி ரூபாய் வரையிலான குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டியை 0.25 சதவீதம் முதல் 1.00 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது.
FILE

இதன்படி, 7 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையில் மற்றும் 211 நாட்களுக்கு மேல் ஓராண்டிற்கு உட்பட்ட காலத்திற்கான டெபாசிட்டிற்கான வட்டி விகிதத்தை 7.50 சதவீதமாக நிர்ணயித்துள்ளது.

180-219 நாட்கள் வரையிலான குறித்த கால டெபாசிட்டிற்கான வட்டி 6.50 சதவீதத்திலிருந்து 6.80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓராண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான டெபாசிட்டிற்கான வட்டி 0.25 சதவீதம் உயர்த்தப்பட்டு 9 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அது போன்று, கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் 0.10 சதவீதம் உயர்த்தப்பட்டு 9.70 லிருந்து 9.80 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகிதம், கடந்த பிப்ரவரி மாதம் 0.05 சதவீதம் குறைக்கப்பட்டு 9.75 லிருந்து 9.70 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்