பருத்தி நூல் ஏற்றுமதி

திங்கள், 20 ஜூலை 2009 (17:11 IST)
இந்தியாவில் இருந்து 1.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள நூல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதில் பருத்தி நூல் மட்டும் சுமால் 1 பில்லியன் டாலர் அளவிற்கு ஏற்றுமதியாகி உள்ளது.

சென்ற நிதி ஆண்டில் 450 மில்லியன் கிலோ நூல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவை வங்காளா தேசம், தென் கொரியா, பிரேசில், எகிப்து, இத்தாலி, சீனா உட்பட 105 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆறு நாடுகளுக்கு மட்டும், மொத்தம் 170 மில்லியன் கிலோ நூல் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 480 மில்லியன் டாலர். சராசரியாக 1 கிலோ 2.88 டாலருக்கு ஏற்றுமதியாகி உள்ளது.

இதில் சென்ற நிதி ஆண்டில் முதல் நான்கு மாதங்களில் 40 விழுக்காடு ஏற்றுமதியாகி உள்ளன. பல்வேறு நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார சரிவால் ஏற்றுமதி குறைந்தது.

இந்தியாவில் வருடத்திற்கு 3911.99 மில்லியன் கிலோ நூல் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் பருத்தி 2,897.82 மில்லியன் கிலோ, கலப்பு இழை நூல் 655.05 மில்லியன் கிலோ, பருத்தி அல்லாத மற்ற செயற்கை இழை நூல் 359.12 மில்லியன் கிலோ உற்பத்தி செய்யப்படுகிறது.

2007-08 ஆம் நிதி ஆண்டில் 4003.22 மில்லியன் கிலோ நூல் உற்பத்தியாகி உள்ளது. இத்துடன் ஒப்பிடுகையில் சென்ற நிதி ஆண்டில் உற்பத்தி குறைந்துள்ளதாக காட்டன் அசோசிஷன் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.

பருத்தி நூல், பாலியெஷ்டர் காட்டன், பாலியெஷ்டர் விஸ்கோஸ், விஸ்கோஷ், பாலியெஷ்டர் ஆகிய ரகங்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்