பங்குச் சந்தையில் சரிந்து வரும் இன்போசிஸ் பங்குகள்

திங்கள், 23 ஜனவரி 2012 (13:30 IST)
மற்ற தகவல்தொழில்நுட்ப முன்னணி நிறுவனங்களைக் காட்டிலும் இன்போசிஸ் நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் சமீப காலங்களில் சரிந்து வருவதால் அதன் பங்குகள் பங்குச் சந்தையில் விலை சரிந்து வருகின்றன.

ஏப்ரல் 2011-இலிருந்தே இன்ஃபோசிஸ் பங்குகள் சரிந்து வந்துள்ளன. இன்று வரை சுமார் 10% வரை அதன் விலை சரிந்து வந்துள்ளன. மேலும் பங்கு ஒன்றின் விலை ரூ.2900த்திற்கும் மேல் செல்லவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் மாதம் முடிந்த காலாண்டில் இன்போசிஸ் நிறுவனத்தின் விற்பனை மற்றும் லாபங்கள் உயர்வு நிலை எய்தினாலும் அதற்குக் காரணம் பெரும்பாலும் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிவினாலேயே என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 8 காலாண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நிதி நிலைகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ள போதும், சில தகவல் தொழில் நுட்ப ஏற்றுமதியாளர்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பன லாபங்களை அடைந்துள்ளதாக சந்தை விவரங்கள் தெரிவிக்கின்றன.

2012ஆம் ஆண்டு நிதியாண்டில் இன்ஃபோசிஸ் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் மிகப்பெரிய புரோஜெக்ட்கள் கையில் இருப்பதால் இன்போசிஸ் நிறுவ்னத்தின் வளர்ச்சி விகிதம் குறித்து எந்த வித ஐயப்பாடும் இல்லை என்று நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் மற்ற ஐ.டி. நிறுவனங்கள் கடந்த ஆண்டில் சிறப்பாகச் செயல்பட்டுள்ள நிலையில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் பங்கு விலைகள் சமீபகாலங்களில் சரிவடைந்திருப்பது கவலையளிக்கும் விஷயமகாவே சந்தையில் பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்