நீலகிரி தேயிலைக்கு ஈரானில் நல்ல வரவேற்பு!

திங்கள், 28 ஜனவரி 2013 (16:38 IST)
FILE
நீலகிரி தேயிலைக்கு ஈரான் நாட்டில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், ஈரானுக்கு ஏற்றுமதியாகும் தேயிலையின் அளவும், உற்பத்தியாளர்களுக்கு வருவாயும் அதிகரித்துள்ளது.

தென்னிந்தியாவில் உற்பத்தியாகும் தேயிலைத்தூள் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது ஈரான் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளதால் குன்னூர் சி.டி.டி.ஏ. ஏலமையத்தைச் சேர்ந்த குழுவினர் அந்நாட்டுக்கு சென்று வந்தனர். இதேபோல், ஈரான் வர்த்தகர்களும் குன்னூர் வந்து பார்வையிட்டனர்.

இதனிடையே கடந்த ஆண்டு ஈரான் நாட்டுக்கு 1.59 கோடி கிலோ தேயிலைத்தூள் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன்மூலம் ரூ.285 கோடி வருமானம் கிடைத்தது. இதுகுறித்து, தேயிலை வாரிய மேம்பாட்டு இயக்குனர் ஜார்ஜென்னர் கூறுகையில், நீலகிரி தேயிலை மிகத்தரமாக உள்ளதால் ஈரானில் இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்