நிதி நிலை முறைபடுத்தல் தொடங்கும்: பிரணாப் முகர்ஜி

வெள்ளி, 18 பிப்ரவரி 2011 (16:47 IST)
உலகளாவிய பொருளாதார பின்னடைவின் காரணமாக ஏற்பட்ட தொய்வை நீக்க அளிக்கப்பட்டுவந்த நிதிச் சலுகைகள் நீக்கப்பட்டு, நிதி நிலை முறைபடுத்தல் (Fiscal consolidation) இந்த நிதி நிலை அறிக்கையில் தொடங்கும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்றுள்ள அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில் இவ்வாறு கூறியுள்ளார்.

பொருளாதார பின்னடவு இந்தியாவின் வளர்ச்சியை பாதித்த நிலையில் நிதி நிலை விரிவாக்க நடவடிக்கைகள் தேவைப்பட்டது. இப்போது பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்வதால், நிதி நிலை முறைபடுத்தல் தேவைப்படுகிறது என்று பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார்.

தொழில உற்பத்திக்கும், ஏற்றுமதிக்கும் கடந்த இரண்டு நிதியாண்டுகளில் அளிக்கப்பட்ட சலுகைகளால் மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, நாட்டின் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.8 விழுக்காட்டிற்கு உயர்ந்தது. இந்த நிதியாண்டில் அது 5.5 விழுக்காடாக இருக்கிறது. இதனை 4 விழுக்காடாக குறைக்கும் வகையில் 2011-12 நிதி நிலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்