திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை

செவ்வாய், 18 ஆகஸ்ட் 2009 (15:01 IST)
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழதொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருவாரூர் மாவட்டத்தில் விவசாய பணிக்காக தண்ணீர் இன்றி விவசாயிகள் தவித்துக் கொண்டிருந்தனர். மேட்டூர் அணையிலும் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், அணை காலம் கடந்த 28 ஆம் தேதி திறக்கப்பட்டது. விவசாயிகள் குறுவை சாகுபடி இல்லாததால், சம்பா பருவ சாகுபடியில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர்.

இந்த பகுதியில் கடந்த சில தினங்களாக லேசான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. இதனால் தட்பவெட்ப நிலையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அனலுக்கு பதிலாக குளிர்ச்சி நிலவுகிறது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் முத்துப்பேட்டை 63 மி.மீ, வலங்கைமான் 55 மி.மீ, திருத்துறைப்பூண்டி 46 மி.மீ,
குடவாசல் 43 மி.மீ, திருவாரூர் 34 மி.மீ, நன்னிலம் 14 மி.மீ, நீடாமங்கலம் 12 மி.மீ, மன்னார்குடி 11 மி.மீ, பதிவாகியுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்