தமிழ்நாட்டில் ரூ.24,230 கோடி முதலீட்டிற்கு அனுமதி

சனி, 26 பிப்ரவரி 2011 (18:28 IST)
இந்திய எண்ணெய் கழகம், மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா, அப்பாலோ டயர்ஸ், மெட்ராஸ் சிமெண்ட்ஸ், சாம்சங் இந்தியா உள்ளிட்ட 15 நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ரூ.24,230 கோடி அளவிற்கு முதலீட்டில் பல்வேறு தொழில்கள் தொடங்க தமிழக அரசு இன்று அனுமதி அளித்தது.

இந்நிறுவனங்களின் தொழில் முதலீட்டிற்கு அரசின் அனுமதியை அந்தந்த நிறுவனங்களின் முதன்மை செயல் அலுவலர்களிடம் துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று நேரடியாக வழங்கினார்.

இந்நிகழ்வில் தமிழக தொழில் துறை செயலர் ராஜீவ் ரஞ்சன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.
தமிழ்நாட்டில் முதலீடு செய்து இந்நிறுவனங்கள் தொடங்கவுள்ள தொழில்கள் மூலம் நேரடியாக 15,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்