தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

புதன், 3 ஜூலை 2013 (16:40 IST)
FILE
தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி ‌சந்தையில் இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.2,467க்கும், ஒரு சவரன் ரூ.19,736க்கும், 24 காரட் தங்கத்தின் விலை 10 கிராம் ரூ.115 குறைந்து ரூ.26,380க்கும் விற்பனையாகிறது.

வெள்ளியின் விலையிலும் சரிவு காணப்படுகிறது. ஒரு கிராம் சில்லரை வெள்ளியின் விலை 20 காசுகள் சரிந்து ரூ.43.50க்கும், பார் வெள்ளி கிலோவுக்கு ரூ.225 சரிந்து ரூ.40,620க்கும் விற்பனையாகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்