தங்கம் விலையில் ஆச்சரிய சரிவு!

வியாழன், 1 மார்ச் 2012 (18:31 IST)
தங்கம் விலை கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவிற்கு இன்று சரிந்து காணப்பட்டது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் சரிவையடுத்தும், ஸ்டாக்கிஸ்டுகள் தங்களிடம் உள்ள கையிருப்பை அதிக அளவில் விற்க தொடங்கியதையடுத்தே தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.28,140 ஆக காணப்பட்டது.இது கடந்த ஆறு மாத காலத்தில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட சரிவு என்றும், இதனால் 10 கிராம் தங்கத்திற்கு ரூ.920 வரை இழப்பு ஏற்பட்டதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

அதேப்போன்று வெள்ளியின் விலையும் இன்று சரிந்தே காணப்பட்டது.10 கிராம் வெள்ளியின் விலை 58,300 ஆக காணப்பட்டது.இதனால் 10 கிராம் வெள்ளிக்கு 2,200 வரை இழப்பு ஏற்பட்டதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்