டீசல் விலையிலும் கட்டுப்பாட்டை நீக்க ரிசர்வ் வங்கி வலியுறுத்தல்

செவ்வாய், 24 ஜனவரி 2012 (17:30 IST)
வாணிபப் பற்றாக்குறையைப் போக்க டீசல் விலை மீதான கட்டுப்பாட்டையும் மத்திய அரசு நீக்க வேண்டும் என்று மத்திய ரிசர்வ் வங்கி வலியுறுத்தியுள்ளது.

"உணவு மானிய மசோதா வரவுள்ள நிலையில் டீசல் விலைக் கட்டுப்பாடுகளை முழுதும் அகற்றுவது உசிதம்" என்று ஆர்.பி.ஐ. தனது 3ஆம் காலாண்டு பணக்கொள்கை ஆய்வுரையில் தெரிவித்துள்ளது.

பெட்ரோல் விலையை தற்போது உயர்த்துவதும், குறைப்பதும் சந்தை சக்திகளுக்குட் பட்டதாக்கப்பட்டுள்ள நிலையில், கெரசின், சமயல் கேஸ் சிலிண்டர், டீசல் மட்டும் இன்னும் அரசுக் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மானியங்கள் வழங்குவதில் பட்ஜெட்டில் பெரிய அளவு சென்று விடும்.

மேலும் தற்போதுள்ள பெட்ரோலிய பொருட்கள் விலை சர்வதேச சந்தைகளின் போக்கிற்கு ஏற்ப இல்லை என்று வேறு கொளுத்திப் போட்டுள்ளது ஆர்.பி.ஐ.

வெப்துனியாவைப் படிக்கவும்