டாட்சனை அறிமுகப்படுத்துகிறது நிசான்

சனி, 3 ஆகஸ்ட் 2013 (14:00 IST)
2014 ஆம் ஆண்டு முதல் வரவிருக்கும் டாட்சன் மாடல் கார்களின், முதல் கார் மாடலை இந்தியா, இந்தோனேஷியா மற்றும் ரஷ்யாவின் அதிக வளர்ச்சியுள்ள சந்தையில் அறிமுகப்படுத்த நிசான் மோட்டார் கம்பெனி லிமிடெட் திட்டமிட்டுள்ளது.
FILE

நிசான் மற்றும் இன்ஃபினிட்டி ப்ரான்டை தொடர்ந்து டாட்சன் ப்ராண்டை தன்னுடைய உலகத்தரம் வாய்ந்த பொறியியல் வல்லமையுடனும், தொழில் நுட்பத் தரத்துடனும் கொண்டு வர நிசான் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதிக வளர்ச்சிக்கான சாத்தியக் கூறு உள்ள நடுத்தர வர்க்க வாடிக்கையாளர் சந்தைக்கு ஏற்ப டாட்சன் மாடல் வடிவமைக்கப்படுகிறது.

மனம் கவரும் பயண அனுபவம், நிம்மதி தரும் உரிமையாளர் அந்தஸ்து மற்றும் நியாயமான வெளிப்படையான விலை நிர்ணயம் போன்ற அம்சங்களுடன் டாட்சன் கார்கள் வெளிவர உள்ளது.

1914 ஆம் ஆண்டு டென், அயோயாமா மற்றும் டகேச்சி என்ற மூவரின் பெயர்களின் முதல் எழுத்தை தாங்கி அவர்களின் முதலீட்டோடு டாட்கோ துவங்கப்பட்டது. நீடித்த உழைப்பு, கவர்ச்சியான வடிவமைப்பு மற்றும் நம்பகத்தன்மை போன்ற அம்சங்களுடன் திகழ்ந்த இந்நிறுவனத்தை 1933 ஆம் ஆண்டு நிசான் நிறுவனம் தனதாக்கிக் கொண்டது.

குறைந்த எடை, நியாயமான விலை மற்றும் நிறைவான தரத்துடன் இளம் ஜப்பானிய மக்களுக்காக டாட்சன் என்ற பெயரில் இக்கார்கள் உருவாகின. உள்நாட்டு பொறியியல் வல்லமை மற்றும் அதிகளவு உற்பத்தி போன்றவற்றால் டாட்சன் கார்கள் பிரபலமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்