ஜூலையில் தொழில் வளர்ச்சி 3.3% மட்டுமே

திங்கள், 12 செப்டம்பர் 2011 (16:42 IST)
இந்தியாவின் தொழில் வளர்ச்சிக் குறியீடு கடந்த ஆண்டு ஜூலை மாதத்தோடு ஒப்பிகையில் 3.3 விழுக்காடு மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளது என மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

கடந்த மாதம் தொழில் வளர்ச்சி 8.8 விழுக்காடு ஆக இருந்தது. தொழில் வளர்ச்சிக் குறியீட்டில் 76 விழுக்காடு பங்கு கொண்ட உற்பத்தி வளர்ச்சி ஜூலை மாதத்தில் 2.3 விழுக்காடாக மட்டுமே உள்ளது. இது ஓராண்டிற்கு முன்னர் 10.3 விழுக்காடாக இருந்தது.

ஆனால், நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள் உற்பத்தி 6.2 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதம் 2.3 விழுக்காடாக இருந்தது. மூலதன இயந்திர உற்பத்தி ஜூன் மாதத்தில் 37.7 விழுக்காடாக இருந்தது, ஜூலையில் 15.2 விழுக்காடாக குறைந்துள்ளது.

மின் உற்பத்தி 13.1 விழுக்காடும், சுரங்கம் 2.8 விழுக்காடும் வளர்ச்சி கண்டுள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்