சாம்சங், எல்ஜியுடன் போட்டிபோட முடியாமல் பிலிப்ஸ் ஓட்டம்!

வியாழன், 31 ஜனவரி 2013 (13:21 IST)
FILE
ஆடியோ, விடியோ சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையிலிருந்து விலகிக் கொள்ள பிலிப்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஒருகாலத்தில் பிலிப்ஸ் காலத்துக்கு ஏற்ப ஏராளமான நவீன எலக்ட்ரானிக் உபகரணங்களை தயாரித்து விற்பனை செய்து வந்தது. ஆனால், ஆசிய உற்பத்தியாளர்களான சாம்சங், எல்ஜி எலக்ட்ரானிக்ஸ் போன்றவற்றின் போட்டியை அதனால் சமாளிக்க முடியவில்லை.

இதனால், ஆடியோ மற்றும் விடியோ சாதனங்கள் உற்பத்தி, விற்பனை பிரிவை ஜப்பானைச் சேர்ந்த புனாய் எலக்ட்ரானிஸ் நிறுவனத்திடம் சுமார் ரூ.1 லட்சம் கோடிக்கு விற்க பிலிப்ஸ் திட்டமிட்டுள்ளது. விற்பனை முடிந்தால் இந்த ஆண்டு கடைசியில் ஆடியோ மற்றும் மல்டிமீடியா உபகரண பிரிவிலிருந்தும், 2017 ஆம் ஆண்டு முதல் விடியோ சாதனங்கள் பிரிவிலிருந்தும் பிலிப்ஸ் விலகிக்கொள்ளும் என்று தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்