ஏற்றுமதி விகிதம் அதிகரிப்பு!

வியாழன், 1 மார்ச் 2012 (19:22 IST)
கடந்த ஜனவரி மாதத்தின் ஏற்றுமதி விகிதம் 10.6 விழுக்காடாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த ஜனவரி மாதத்தில் சுமார் 25.34 பில்லியன் டாலர் அளவுக்கு இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

இது கடந்த 2011 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதத்தின் ஏற்றுமதி 6.7 விழுக்காடாக இருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் ஜனவரி மாதத்தின் ஏற்றுமதி 3 விழுக்காட்டிற்கும் அதிகமாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக துறை அமைச்சகம் விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்