ஏற்றுமதி சலுகை: அரசுக்கு ரூ.50 ஆயிரம் கோடி இழப்பு

சனி, 27 மார்ச் 2010 (13:55 IST)
மத்திய அரசு வழங்கி வரும் ஏற்றுமதி சலுகைகளால், 2009-10 ஆம் நிதி ஆண்டிலரூ.50 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக வரி வருவாய் இழப்பு ஏற்படும் என பொருளாதார ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத அளவு நிதி பற்றாக்குறை அதிகரித்துள்ளது. நிதி பற்றாக்குறையை குறைக்க சில சலுகைகள் திரும்பப் பெறப்படலாம் என்ற கருத்து நிலவுகிறது. அத்துடன் உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியினால் ஏற்றுமதி கடந்த 13 மாதங்களாக சரிவடைந்து வந்தது. சென்ற நவம்பர் மாதத்திலிருந்து ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.

மத்திய நிதி அமைச்சகத்தின் மூத்த ஆலோசகர் எச்.ஏ.சி. பிரசாத், ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கு தற்போதுள்ள நிலையில் சலுகை திட்டங்களை நீட்டிக்க வேண்டியது அவசியம். அதேசமயம், இந்த சலுகைகளில் உள்ள சில குறைகளை நீக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.


வெப்துனியாவைப் படிக்கவும்