ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 80 ஆயிரம் டாலர் அபராதம்
வெள்ளி, 4 மே 2012 (15:47 IST)
FILE
இந்திய அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனத்திற்கு 80 ஆயிரம் டாலர் அபராதம் விதித்துள்ளது அமெரிக்க விமான போக்குவரத்து துறை.
இது குறித்து அமெரிக்க விமான போக்குவரத்து துறை செயலாளர் ரே லாஹூட் தெரிவித்ததாவது, போக்குவரத்து விதிமுறை மீறலுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு விமான சேவை குறித்து சரியான தகவல் வழங்காதது மற்றும் வாடிக்கயைளர்களுக்கு புதிய நடவடிக்கை குறித்து முன் கூட்டியே தகவல் அளிக்காதது போன்ற காரணங்களுக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.