எல்.ஐ.சி புதிய காப்பீடு- ஜீவன் வர்ஷா

புதன், 25 மார்ச் 2009 (10:53 IST)
இந்திய ஆயுள் காப்பீடு கழகம் (எல்.ஐ.சி), ஜுவன் வர்ஷா என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

எல்.ஐ.சி சமீபத்தில் ஜுவன் ஆஸ்தா (Jeevan Astha) என்ற காப்பீடு திட்டத்தை அறிமுதப்படுத்தியது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. இதை தொடர்ந்து ஜுவன் வர்ஷா (Jeevan Varsha) என்ற புதிய காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

இது மணி பேக் பாலிசியாகும். குறிப்பிட்ட தொகை திரும்பு கிடைக்கும் என்ற உத்திரவாதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த காப்பீடு பாலிசியில் குறிப்பிட்ட கால இடைவெளியில், காப்பீடு செய்து கொண்ட தொகையில் குறிப்பிட்ட விழுக்காடு திரும்ப கொடுக்கப்படும். காப்பீடு செய்து கொண்டவர் மரணமடைய நேரிட்டால், அவரின் வாரிசுக்கு காப்பீடு செய்து கொண்ட தொகை கொடுக்கப்படும்.

ஜுவன் வர்ஷா காப்பீடு செய்து கொள்வதற்கு 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சம் 66 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே காப்பீடு செய்து கொள்ள முடியும். 66 வயது உள்ளவர்கள் 9 வருட காப்பீடு செய்து கொள்ளலாம். 63 வயது நிரம்பியவர்கள் 12 வருட காப்பீடு செய்து கொள்ளலாம்.

இதன் பிரிமியம் தொகையை மாதாமாதம், மூன்று மாதம், ஆறு மாதம், வருடத்திற்கு ஒரு முறை என்ற தவணைகளில் கட்டலாம். குறைந்தபட்சம் 75 ஆயிரம் காப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதற்கு உச்சவரம்பு இல்லை.

இந்த திட்டத்தின் கீழ் 9 வருடங்கள் காப்பீடு செய்து கொள்பவர்களுக்கு, ஆயிரம் ரூபாய்க்கு ரூ.65 ( 6.5%) இலாப தொகையாக வழங்கப்படும். 12 வருடம் காப்பீடு செய்து கொண்டவர்களுக்கு ரூ.1,000 க்கு (7%) ரூ.70 வழங்கப்படும்.

இதில் இருந்து பெறும் தொகைக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஜுவன் வர்ஷா காப்பீடு திட்டத்தின் படி, 3 வருட முடிவில் 10%, 6 வது வருட முடிவில் 20%, 9 வருட முடிவில் 30% திரும்ப வழங்கப்படும். 12 வருட முடிவில் மீதம் உள்ள தொகை, லாயல்டி போன்றவை சேர்த்து வழங்கப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்