ஊழியர்கள் இருவருக்கு இழப்பீடாக ரூ.160 கோடி கொடுக்க டிசிஎஸ் ஒப்புதல்!

புதன், 27 பிப்ரவரி 2013 (12:50 IST)
FILE
இந்தியாவின் நம்பர் 1 மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் முன்னாள் ஊழியர்கள் இருவருக்கு இழப்பீடாக ரூ.160 கோடி கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது.

அமெரிக்காவுக்கு அனுப்பபடும் இந்திய ஊழியர்களின் உரிமைகளை மறுத்ததாக இந்த வழக்கு முன்னாள் டி.சி.எஸ். ஊழியர்கள் இருவரால் அமெரிக்காவில் தொடரப்பட்டது.

இந்த வழக்கை 2006ஆம் ஆண்டு டி.சி.எஸ். முன்னாள் ஊழிஅய்ர்களான கோபிசந்த் வேதாசலம், மற்றும் கங்கனா பேரி ஆகியோர் தொடர்ந்தனர். இவர்கள் இருவரும் டி.சி.எஸ். சார்பாக அமெரிக்காவில் ஆன் - சைட் பணிக்காக அனுப்பப்பட்டனர்.

அமெரிக்காவில் பணியாற்றும் போது தங்களது இந்திய சம்பளங்களின் பேரில் வரிகளை டி.சி.எஸ். பிடித்தம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டது. அமெரிக்க மற்றும் இந்திய வரிகளை செலுத்துமாறு இந்த இரு ஊழியர்களையும் வற்புறுத்தி கையெழுத்து வாங்கியதாக குற்றம்சாட்டி கலிபோர்னியாவில் வழக்கு தொடர்ந்தனர்.

முதலில் இந்தக் குற்றசாட்டை மறுத்த டி.சி.எஸ். நிறுவனம் இந்த வழக்கை அமெரிக்காவில் நடத்த முடியாது என்றும் இந்தியாவில்தான் நடத்துவோம் என்றும் கூறி மனு செய்திருந்தது. ஆனால் இன்று ரூ.160 கோடி கொடுக்க அதே நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்