உற்பத்தி தீர்வை உயர்ந்தால் கார், பைக் விலைகள் உயரும்

வெள்ளி, 4 பிப்ரவரி 2011 (11:50 IST)
உலகளாவிய பொருளாதார பின்னடைவு ஏற்பட்ட நேரத்தில் குறைக்கப்பட்ட உற்பத்தித் தீர்வையை நிதி நிலை அறிக்கையில் மீண்டும் உயர்த்தினால் கார், பைக் விலைகள் உயரும் என்று வாகன உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

பொருளாதார பின்னடைவின் போது, 2 ஆண்டுகளுக்கு முன்னர், உற்பத்தித் தீர்வை 2 விழுக்காடு குறைக்கப்பட்டது. இதனை மீண்டும் பழைய அளவிற்கு உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். இது வாகன உற்பத்தியாளர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே வாகன உற்பத்தி இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாக தங்களுடைய இலாபம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உற்பத்தி வரியை உயர்த்தினால் விலைகளை உயர்த்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர்கள் கூறியுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்