உரங்களுக்கான மானியம் குறைப்பு:மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வெள்ளி, 2 மார்ச் 2012 (14:20 IST)
பாஸ்பேட், பொட்டாஷ், நைட்ரஜன் உள்ளிட்ட உரங்களுக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதால் இவற்றின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், மத்திய உரத்துறை அளித்த பரிந்துரையின்படி உரத்துக்கு அளிக்கப்படும் மானியத்தைக் குறைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நைட்ரஜன் உரத்துக்கு கிலோவுக்கு ரூ. 24-ம், பொட்டாசியத்துக்கு கிலோவுக்கு ரூ. 21.80-ம் குறைக்க உர அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

வரும் நிதி ஆண்டில் குறைப்புக்குப் பிறகு அளிக்கப்படும் மானிய விவரம் ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியாகும் என மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்