உணவுப் பொருள் பணவீக்கம் 9.42% ஆக குறைந்தது

வியாழன், 17 மார்ச் 2011 (17:16 IST)
பருப்பு வகைகள், உருளைக் கிழங்கு ஆகியவற்றின் விலைகள் குறைந்ததால் மார்ச் 5ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 0.10 விழுக்காடு குறைந்து 9.42 விழுக்காடாகியுள்ளது.

உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் தொடர்ந்து குறைந்துவிடும் என்றும், ஆனால், எரிபொருட்களுக்கான பணவீக்கம்தான் பிரச்சனையாக இருக்குமென்று கூறப்படுகிறது. கச்சா எண்ணெய் விலை பன்னாட்டுச் சந்தையில் பீப்பாய்க்கு 100 டாலர்களுக்கும் அதிகமாக உயர்ந்து, ஜப்பான் நிலநடுக்கத்திற்குப் பிறகு விலை குறைந்து வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மட்டுமே பணவீக்கத்திற்கு பெரும் சவாலாக இருக்கும் என்று இந்திய மைய வங்கியும் கருதுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்