உணவுப் பொருள் பணவீக்கம் 8.74% ஆக உயர்வு

வெள்ளி, 22 ஏப்ரல் 2011 (17:32 IST)
ஏப்ரல் 2ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில், 18 மாதங்களில் இல்லாத அளவிற்கு 8.28 விழுக்காடாக குறைந்த உணவுப் பொருட்களின் பணவீக்கம், பழங்கள், பால் ஆகியவற்றின் விலை உயர்வால் ஏப்ரல் 9ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் மீண்டும் உயர்ந்து 8.74 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

2012 முதல் 2017ஆம் ஆண்டு வரையிலான 12வது ஐந்தாண்டுத் திட்டத்திற்கான முன்னேற்ற இலக்கை நிர்ணயிக்க வியாழக்கிழமை டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங், திட்ட ஆணையத்தின் கூட்டத்தை கூட்டியிருந்த நிலையில், மீண்டும் உணவுப் பொருள் பணவீக்கம் உயர்ந்துள்ள அறிவிப்பு வெளியானது.

ஏப்ரல் 9ஆம் தேதியுடன் முடிவுற்ற ஒரு வார காலத்தில் பழ வகைகளின் விலைகள் 25.25 விழுக்காடும், முட்டை, ஆட்டுக்கறி, மீன் ஆகியவற்றின் விலைகள், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் 14.96 விழுக்காடும், வெங்காயத்தின் விலை 8.28 விழுக்காடும் உயர்ந்ததனால் உணவுப் பொருள் பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்