உணவுப் பொருள் பணவீக்கம் 17.05% ஆக உயர்வு

வியாழன், 3 பிப்ரவரி 2011 (13:31 IST)
காய்கறிகளின் கடுமையான விலையேற்றத்தின் காரணமாக ஜனவரி 22ஆம் தேதியுடன் முடிவுள்ள வாரத்தில் உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் ஒரு வாரத்தில் 1.48 விழுக்காடு உயர்ந்து 17.05 விழுக்காடாக அதிகரித்துள்ளது.

ஜனவரி 15ஆம் தேதியுடன் முடிவுற்ற வாரத்தில் 15.57 விழுக்காடாக இருந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம், கடந்த ஆண்டு இதே வாரத்தில் 20.56 விழுக்காடாக இருந்ததென மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரம் கூறுகிறது.

இந்த ஓராண்டுக் காலத்தில் வெங்காயத்தின் விலை மட்டும் 130.41 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆனால் தற்போது குறைந்துள்ளது. உருளைக் கிழங்கின் விலை 6.22 விழுக்காடு உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாக காய்கறிகளின் விலை இந்த ஓராண்டில் மட்டும் 77.05 விழுக்காடு உயர்ந்துள்ளது!

பழ வகைகள் 15.47 விழுக்காடும், பால் விலை 11.41 விழுக்காடும் உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்