இந்திய ஏற்றுமதிகள் மார்ச்சில் சரிவு

வெள்ளி, 1 மே 2009 (14:46 IST)
புது டெல்லி: கடந்த மார்ச் மாதம் இந்திய ஏற்றுமதிகள் 33.3 விழுக்காடு சரிவடைந்துள்ளது. தொடர்ந்து 6-வது மாதமாக இந்த சரிவு நிலை நீடிக்கிறது. உலகப் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

கடந்த மார்ச் மாதம் ஏற்றுமதிகள் 11.51 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. இது இதற்கு முந்தைய நிதியாண்டின் மார்ச் மாதத்தில் 17.25 பில்லியன் டாலர்களாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்றுமதி மட்டுமல்லாமல் இறக்குமதியும் 34 விழுக்காடு குறைந்து 15.56 பில்லியன் டாலர்களாக இருந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்