அயல் பணி, விசா: யுஎஸ்-இடம் இந்தியா கவலை

புதன், 22 செப்டம்பர் 2010 (19:13 IST)
அயல் நாடுகளுக்கு அரசுப் பணிகளை அளிப்பதற்கு அமெரிக்காவின் ஒஹையோ மாநிலம் விதித்துள்ள தடை தவறான ஆலோசனையின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும், அதனை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதியிடன் இந்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த சர்மா கூறியுள்ளார்.

வாஷிங்டனில் நேற்று நடந்த இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக கொள்கை மன்றக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சர்மா, “விசா கட்டணத்தை உயர்த்தியதால் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்படும் பாதிப்பை இன்றைய பேச்சுவார்த்தையில் மிகத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளோம். அதற்கான பதிலை எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

விசா கட்டணத்தை உயர்த்தியதும், அயல் பணிகளுக்கு தடை விதித்துள்ளதும் தற்காப்பு நடவடிக்கைகள் என்பதையும் அவர்களுக்கு எடுத்துரைத்தாகவும் ஆனந்த் சர்மா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்