கறுப்பு பணம்: சுவிட்சர்லாந்துடன் பேச்சு

செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (16:04 IST)
சுவிட்சர்லாந்து வங்கிகளில் போடப்பட்டுள்ள கறுப்புபபணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக சுவிட்சர்லாந்துடன் இந்தியா பேச்சநடத்த உள்ளது. இரு நாடுகளிடையிலான பேச்சு வார்த்தை இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெறுமஎன தெரிகிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சட்ட விரோதமாக சேர்த்து வைத்துள்ள கறுப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து உட்பட சில நாடுளில் உள்ள வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கின்றனர். குறிப்பாக சுவிட்சர்லாந்து சட்டப்படி, அந்த நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர் பற்றிவிவரம் தெரிவிக்க வேண்டிய தேவையில்லை.
இதனால் உலகில் பெரும்பாலான நாடுகளைசசேர்ந்தவர்கள், சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர்.
அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி கட்டுப்படுத்த முடியாத அளவு அதிகரித்ததை தொடர்ந்து, அமெரிக்கா சுவிஸ் வங்கிகளில் அமெரிக்கர்கள் போட்டுவைத்துள்ள டாலரை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியது.
அமெரிக்காவின் வற்புறுத்தலை தொடர்ந்து, சுவிட்சர்லாந்தைட் சேர்ந்த யூ.எஸ்.பி வங்கியில் டாலரை போட்டு வைத்துள்ள அமெரிக்கர்களின் விபரங்களை தர சம்மதித்துள்ளது.
இந்தியர்களின் விபரத்தை கொடுக்கும் படி மத்திய அரசு, சுவிட்சர்லாந்திடம் கோரிக்கை விடுத்தது. இதற்கு சுவிட்சர்லாந்தை சேர்ந்த அதிகாரி, இந்தியாவின் தொலைபேசி பெயர் பட்டியல் அடங்கிய டெலிபோன் டைரக்கடரியை கொடுத்து, சுவிட்சர்லாந்து வங்கிகளில் பணம் போட்டுள்ளவர்களின் விபரத்தை கேட்க வேண்டாம் என்று ஏளனமாக பதிலளித்தார்.
அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையே இரு தரப்பு வரி ஒப்பந்தம் இருப்பதால், விபரத்தை தர முடியாது என்றும் சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்திய நிதித்துறை அதிகாரிகள், சுவிட்சர்லாந்து அதிகாரிகளுடன் இந்தியர்களின் விபரம் அறிவதற்காக பேச்சு வார்த்தையை தொடங்க உள்ளனர்.
இந்த பேச்சு வார்த்தை, பொருளாதார மேம்பாட்டுக்கு கூட்டாசெயல்படுவதற்காக சுவிட்சர்லாந்துடன் போடப்பட்ட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு முறஒப்பந்த அடிப்படையில் கறுப்புப் பணத்தைக் கொண்டு வருவது தொடர்பாக பேச்சநடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஒப்பந்த அடிப்படையிலசுவிட்சர்லாந்து அரசு தகவல்களை அளிக்கும்பட்சத்தில், அதில் தனிநபர்களும் இந்திசட்டவிதிகளை மீறி பணத்தை பதுக்கியிருப்பது தெரியவந்தால் அவர்கள் மீது வழக்கதொடரவும் முடிவு செய்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
சென்ற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் ரூ. 70 லட்சம் கோடி கறுப்பு பணம், பல்வேறு நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதை நாட்டிற்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை எல்.கே.அத்வானி தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்.

அத்துடன் இது தொடர்பான வழக்கு உச்ச நீதி மன்றத்திலும் நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்