கடன் வட்டி விகிதத்தை 7 வங்கிகள் உயர்த்தின

செவ்வாய், 1 பிப்ரவரி 2011 (20:40 IST)
பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களின் மீதான வட்டி விகதத்தை (ரீபோ ரேட்) இந்திய மைய வங்கி (ஆர்பிஐ) உயர்த்தியதையடுத்து, கடன்களுக்கு வசூலிக்கும் வட்டி விகிதத்தை வங்கிகளும் 0.50 விழுக்காடு உயர்த்தியுள்ளன.

பாங்க் ஆஃப் பரோடா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, தேனா வங்கி ஆகியன வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ள வங்கிகளாகும்.

444 நாட்களுக்கு அதிகமான வைப்பு நிதிகளின் மீதான வட்டியை 0.50 விழுக்காடு உயர்த்தி 9.10 விழுக்காடாக அதிகரித்துள்ளது பாங்க் ஆஃப் பரோடா. அதற்குக் குறைவான வைப்பு நிதி மீதான வட்டியை 8.75 விழுக்காடாக உயர்த்தியுள்ளது.

ஹெச்.டி.எஃப்.சி. வங்கி வீட்டுக் கடன்களின் மீதான மாறக்கூடிய வட்டி விகிதத்தை 0.25 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடன்களின் மீதான வட்டி விகிதத்தை 9.5 விழுக்காடாக உயர்த்தியுள்ளது இந்தியன் வங்கி.

வெப்துனியாவைப் படிக்கவும்