பொங்கல் பண்டிகை பற்றி கூறப்படும் புராணக்கதைகள் பற்றி தெரியுமா...?

ஒவ்வொரு பண்டிகைகளுக்கும் பின்னணியிலும் சுவாரசியமான புராணக்கதைகள் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளது. பொங்கல் பற்றிய புகழ் பெற்ற இரண்டு வரலாற்று  கதைகள் உள்ளது - ஒன்று சிவபெருமானுடன் தொடர்புடையது, மற்றொன்று இந்திர தேவனுடன் தொடர்புடையது.

போகி, பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல், உழவர் திருநாள் என வரிசையாக பல பண்டிகைகளை கொண்டுள்ளது இது. அனைத்து வீடுகளும்  வெள்ளையடிக்கப்பட்டு மிகவும் சிறப்பான முறையில் பட்டிதொட்டியெங்கும் கொண்டாடப்படும் பண்டிகை இது.
 
புராணக் கதை 1: கிருஷ்ணர் மற்றும் இந்திர தேவன் இந்திர தேவன் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட மற்றொரு புராணத்தாலும்  பொங்கல்  கொண்டாடப்படுகிறது. கடவுள்களுக்கு எல்லாம் அரசனானதால் மிகவும் கர்வத்துடன் இருந்து வந்த இந்திர  தேவனுக்கு பாடம் புகுத்த எண்ணினார் குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர். ஆடு மேய்ப்பவர்கள் அனைவரும் இனி இந்திர  தேவனை வணங்க வேண்டாம் என கூறினார்.

இதனால் கோபம் கொண்ட இந்திர  தேவன், புயல் மழையை உண்டாக்க  மேகங்களை பூமிக்கு அனுப்பினார். மழையும் 3 நாட்களுக்கு தொடர்ந்தது. கிருஷணரோ மனிதன் இனத்தை பாதுகாக்க   கோவர்த்தன மலையை கையில் தூக்கி சுமந்து கொண்டார். பின் தன் தவறையும், கிருஷ்ணரின் தெய்வீக சக்தியையும் உணர்ந்தார் இந்திர பகவான்.
 
புராணக் கதை 2: சிவபெருமான் மற்றும் நந்தி புராணத்தின் படி, ஒரு முறை நந்தியிடம் பூமிக்கு செல்லுமாறும், அங்கே மனிதர்களிடம்  தினமும் எண்ணெய் மசாஜ்  செய்து குளித்து, மாதம் ஒரு முறை மட்டுமே உண்ணுமாறு கூற சொன்னார் சிவபெருமான். ஆனால்  நந்தியோ, தவறுதலாக, தினமும் உண்ணவும்  மாதமொருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்கவும் அனைவரிடமும் கூறி  விட்டது.

இதனால் கோபம் கொண்ட சிவபெருமான் நந்திக்கு சாபமிட்டார். அதனை  என்றுமே பூமியில் வாழுமாறு கூறினார்.  அதிகமான உணவை தயாரிக்க மனிதர்களுக்கு உதவியாக நிலத்தை உழ வேண்டும் என கூறினார். அதனால் தான் இந்த  நாளில் மாட்டிற்கு தொடர்புண்டு என கூறப்படுகிறது.
 
இந்து புராணங்களின் படி, 6 மாதங்களாக நிலவி வரும் நீண்ட இரவுகளுக்கு பிறகு வரும் கடவுள்களின் தினம் தான் இது. மூன்று நாட்களுக்கு நீடிக்கும் இந்த பண்டிகை, தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான மற்றும் அறுவடை திருவிழா இந்த பொங்கல் பண்டிகையாகும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்