திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா

வியாழன், 4 டிசம்பர் 2008 (11:13 IST)
webdunia photoWD
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை வெகு ‌விம‌ரிசையாக‌த் துவங்கியது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் கிரிவலத்திற்கு அடுத்தபடியாக கார்த்திகைத் தீபத் திருநாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

webdunia photoWD
அதன்படி, இந்த ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாள் வருகிறது. அதையொட்டி கடந்த செவ்வாய்க்கிழமை கார்த்திகை தீபத் திருவிழா நிகழ்ச்சிகள் துவங்கின.

அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் (நிலம், நீர், வானம், காற்று, நெருப்பு) அலங்காரத்துடன் மாட வீதிகளில் வீதி உலா வந்தனர்.

அப்போது கோயிலில் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் இறைவனை தரிசித்தனர்.