கிருஷ்ண ஜெயந்தி

புதன், 8 ஆகஸ்ட் 2012 (20:02 IST)
மஹா விஷ்ணு கிருஷ்ணாவதாரம் எடுத்த தினமே கிருஷ்ண ஜெயந்தி (கோகுலாஷ்டமி) பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

கிருஷ்ணரஇந்திமனங்களிலபல்வேறவிதங்களிலகுடிகொண்டிருப்பவன். மீராவுக்ககாதலன், ராதாவுக்குமஅவ்வாறே. அர்ஜுனனுக்கநண்பன், தத்துஞானி, வழிகாட்டி.

நாமஎன்னவாஇருக்கிறோமஅதனபடியநமக்ககாட்சி தருபவர்தானகிருஷ்ணர். பீஷ்மரஅம்புபபடுக்கையிலகிடந்போதஅவருக்குமஒரதரிசனமகொடுக்கிறார். ஆனாலமுழஆயுதபாணியாகககாட்சி தருகிறார். ஏனெனிலபீஷ்மரஒரபோரவீரர். அவருக்கபோரவீரராகவகாட்சியளிக்கிறார்.

விஷ்ணசகஸ்ரநாமத்திலவருமவனமாலி கதசாங்கி சங்கசக்ரீச்நந்தகஎன்ஸ்லோகமபீஷ்மருக்ககிருஷ்ணரகொடுத்போர்வீரனதரிசனத்தைககுறிப்பதாகும்.

இந்துககடவுளர்களிலபக்தர்களமனதிலதனததீராவிளையாட்டுததனத்தினாலஅதிகமகுடிகொண்டிருப்பவரகிருஷ்பகவான்தான்.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரத்தன்று கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கிருஷ்ணரபிறந்தினமஅஷ்டமி. ராமரபிறந்தினமநவமி.

கிருஷ்ண அவதாரம் இந்துக்களுக்கு மிக முக்கியமானதாகும். ஏனெனில் போர்க்களத்தில் அர்ஜூனனுக்கு, கிருஷ்ணர் கொடுக்கும் உபதேசங்களஇந்துக்களின் புனித நூலான பகவத் கீதையானது. பகவத் கீதையில் அர்ச்சுனனுக்கு அருளிய உபதேசங்களுடன் இந்திய தத்துவ சாரங்களின் அடிப்படைகளை ஒன்று கலந்து கொடுக்கப்பட்டுள்ள நூல் பகவத் கீதையாகும்.

இந்த நாளில் கிருஷ்ணருக்குப் பிடித்த உணவுப் பொருட்களை செய்தும், கிருஷ்ணரின் சிலைகளை நன்றாக அலங்கரித்தும் கிருஷ்ணரை தங்கள் இல்லங்களுக்கு வரவழைக்கும் விதமாக, குழந்தையின் கால் பாதங்களை வரைந்தும் இந்துக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டு

கிருஷ்ணருக்குப் பிடித்தமானவற்றில் அவலும் ஒன்று. அந்த அவல் லட்டை செய்வது எப்படி என்று பார்ப்போம்...

தேவையானப் பொருட்கள்

அவல் - 1 கப்
பொட்டுக் கடலை (உடைத்தக் கடலை) - 1/2 கப்
முந்திரி - 6
திராட்சை - 6
ஏலப்பொடி
பால் - அரை கப்
சர்க்கரை - 1 கப்
நெய்
தேங்காய் துருவல் - 2 கப்

செய்முறை

அவல், பொட்டுக்கடலை இரண்டையும் சுத்தம் செய்து தனித்தனியே வெறுமனே வறுத்து பொடித்து வைத்தக் கொள்ளவும். வாணலியில் சிறிது நெய் விட்டு முந்திரி, தேங்காய் துருவல், காய்ந்த திராட்சையை வறுத்து பொடித்துக் கொள்ளவும். சர்க்கரையையும் பொடித்து வைத்துக் கொள்ளவும்.

அகலமான பாத்திரத்தில் எல்லாவற்றையும் போட்டு ஏலப்பொடி, பால், நெய் சேர்த்து நன்கு கிளறி தேவையான அளவில் லட்டுக்களை செய்து கொள்ளுங்கள்.

உங்கள் வீட்டில் கிருஷ்ணருக்குப் பிடித்த அவல் லட்டுக்கள் தயார்.

வெப்துனியாவைப் படிக்கவும்