அரபிக்கடலில் நாளை உருவாகிறது "ஷகின்" புயல்!

வியாழன், 30 செப்டம்பர் 2021 (12:08 IST)
வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அழ்ந்த காற்றழுத்த மண்டலமாக உருவான நிலையில் அது ‘குலாப்’ புயலாக வலுப்பெற்றது. இந்த புயல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்தில் கரையை கடந்து அரபிக்கடலை அடைந்து நாளை வலுப்பெறுகிறது
 
எனவே அரபிக்கடலில் நாளை  புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. இந்த புதிய புயலுக்கு ஷகின் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  எனவே இந்திய மற்றும் அதனை சுற்றியுள்ள அண்டை நாடுகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால் அடுத்த 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்