டிகிரி முடிச்சிருந்தா போதும்.. EPFO நிறுவனத்தில் வேலை! – வெளியான அசத்தல் அறிவிப்பு!

வியாழன், 9 மார்ச் 2023 (09:15 IST)
மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவனத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய தொழிலாளர் வருங்கால வைப்புநிதி (EPFO – Employees Provident Fund Organisation) நிறுவனத்தில் காலியாக உள்ள 577 பணியிடங்களை நிரப்ப தகுதி வாய்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 418 அமலாக்க அதிகாரி பணியிடங்களும், 159 உதவி நிதி ஆணையர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

அமலாக்க அதிகாரி பணிக்கு வயது வரம்பு 30க்குள் இருக்க வேண்டும், உதவி நிதி ஆணையர் பணிக்கு வயது வரம்பு 35க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவில் உள்ளவர்களுக்கு வயது வரம்பு உண்டு. எழுத்து தேர்வு மற்றும் நேர்க்காணல் மதிப்பெண்கள் அடிப்படையில் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதுகுறித்த மேலதிக தகவல்களுக்கு EPFO Job Notification மற்றும் https://www.upsc.gov.in/ தளத்தை காணலாம்.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்