மனிதநேயத்தில் பயிற்சி: 3 மாணவிகள் உதவி ஆணையராகத் தேர்வு

புதன், 5 ஜனவரி 2011 (20:44 IST)
FILE
சைதை சா.துரைசாமியின் மனிதநேயம் இலவச கல்வியகத்தில் பயிற்சி பெற்ற 3 மாணவிகள் தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறையில் உதவி ஆணையராக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி உள்ளிட்ட மத்திய, மாநில அரசுப் பணிகளுக்கான தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவியருக்கு இலவச பயிற்சி அளித்துவரும் மனிதநேய கல்வியகத்தில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையருக்கான (குரூப் - 1பி) தேர்வு (24 இடங்களுக்கு) கடந்த ஆண்டு மே மாதம் 30ஆம் தேதி எழுத்துத் தேர்வும், டிசம்பர் 12ஆம் தேதி நேர்முகத் தேர்வும் நடத்தப்பட்டது.

இதில் மனிதநேயக் கல்வியகத்தில் பயிற்சி பெற்ற டி.அனிதார ஜி.ஜெயப்பிரியா, பி.கே.கவிநிதா ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

எதிர்வரும் குரூப் -1, குரூப் -2 தேர்விற்கு மனித நேயம் நடத்தும் நுழைவுத் தேர்வு ஜனவரி 26ஆம் தேதி மதியம் 2 மணிக்கு சென்னை, சேலம், கோவை, திருச்சி, திருநெல்வேலி, மதுரை, மேலூர் ஆகிய 6 மையங்களில் நடைபெறுகிறது. விண்ணப்பங்களை பதிவு செய்துக்கொள்ள இறுதி நாள் 23.01.2011 ஆகும். தேர்வு நடைபெறும் மையங்களைப் பற்றிய விவரங்களை www.saidais.com என்ற இணையத் தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று மனிதநேய கல்வியகத்தின் மாநில தேர்வு ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்