பு‌திய ப‌ல்கலை, க‌‌ல்லூ‌ரிக‌ள் துவ‌க்க‌ம்

செவ்வாய், 8 ஜூலை 2008 (10:35 IST)
தமிழ்நாட்டில் புதிதாக 71 தனியார் சுயநிதி பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கழக‌ம் அனுமதி அ‌ளி‌த்து‌ள்ளது. மேலும், 6 அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் துவ‌ங்கப்பட உ‌ள்ளது.

இதனா‌ல் இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டில் கூடுதலாக சுமார் 10 ஆயிரம் பொ‌றி‌யிய‌ல் இட‌ங்க‌ள் கிடைக்கும்.

தமிழ்நாட்டில் 6 அரசு பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளும், 3 அரசு உதவி பெறும் கல்லூரிகளும், 4 அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும், 263 தனியார் சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. இதன்மூலம் சுமார் 65 ஆயிரம் பி.இ., பி.டெக். இடங்கள் ஒற்றைச்சாளர முறையில் கல‌ந்தா‌ய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

தனியார் கல்லூரிகள் அரசு கல்விக்கட்டணம் வசூலிப்பதால் மாணவ-மாணவிகளின் வசதிக்காக தமிழக அரசும் மேலும் 6 பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகளை தொடங்க முடிவு செய்தது. விழுப்புரம், பண்ருட்டி, திண்டிவனம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் உள்பட 6 இடங்களில் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளாக அவை இந்த ஆண்டு தொடங்கப்படுகின்றன. இதன்மூலம் சுமார் 1,500 இடங்கள் கிடைக்கும்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் புதிதாக 71 தனியார் பொ‌றி‌யிய‌ல் கல்லூரிகள் தொடங்குவதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கழக‌ம் (ஏ.ஐ.சி.டி.இ.) அனுமதி அளித்துள்ளது. ஆவடி, பொன்னேரி, மறைமலை நகர், பூந்தமல்லி, விழுப்புரம், விக்கிரவாண்டி, திருச்சி, சமயபுரம், அவினாசி, ஓமலூர், ஈரோடு, விருதுநகர், சிவகாசி, கன்னியாகுமரி, தோவாளை, தென்காசி, வாசுதேவநல்லூர் உள்பட பல்வேறு இடங்களில் அந்த கல்லூரிகள் தொடங்கப்படுகின்றன.

புதிதாக தொடங்கப்படும் பொ‌றி‌யிய‌ல் கல்லூரிக்கு அனைத்து பாடப்பிரிவுகளையும் சேர்த்து 240 இடங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி 71 சுயநிதி கல்லூரிகளில் 17,040 இடங்கள் உருவாகும். அதில் அரசு விதிமுறைப்படி 50 சதவீத இடங்கள் கல‌ந்தா‌ய்‌வி‌ல் நிரப்பப்படும். இதன்மூலம் இந்த ஆண்டு புதிய அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சேர்த்து சுமார் 10 ஆயிரம் இட‌ங்க‌ள் கூடுதலாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்