நடப்பு நிதியாண்டில் 2,000 பணியாளரை நியமிக்க ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி திட்டம்

செவ்வாய், 15 செப்டம்பர் 2009 (13:13 IST)
நடப்பு நிதியாண்டில் புதிதாக 2 ஆயிரம் பணியாளரை நியமிக்க ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கி திட்டமிட்டுள்ளதாக அந்த வங்கியின் உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

தனியார் வெளிநாட்டு வங்கிகளில் ஒன்றான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கியின் இந்திய கிளைகளில் 8,000 பேர் பணியாற்றுகின்றனர். இந்த வங்கி தற்போது அறிவுசார் வெளிப்பணி ஒப்படைப்பு (கேபிஓ) பிரிவைத் தொடங்க முடிவு செய்துள்ளது.

வங்கியின் அங்கமான ஸ்கோப் நிறுவனத்தின் ஒத்துழைப்போடு கேபிஓ தொடங்கப் போவதாக வங்கியின் தெற்காசிய பிரிவுக்கான தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் ஐயர் தெரிவித்தார். தற்போது ஸ்கோப் இண்டர்நேஷனல் அமைப்புக்கு மலேசியா, சீனா மற்றும் சென்னையில் அலுவலகங்கள் உள்ளன. சென்னை அலுவலகத்தில் மட்டும் 7,000 பேர் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்