கார்ட்டூன் வரைவது கு‌றி‌த்த பயிற்சி

வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (11:57 IST)
ஓ‌‌விய‌ங்க‌ள் வரைவ‌தி‌ல் ஆர்வம் கொ‌ண்ட பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு கார்ட்டூன் மற்றும் ஓவியப் பயிற்சி அளிக்க ஏ‌ற்பாடு செ‌ய்து‌ள்ளா‌ர் கார்ட்டூனிஸ்ட் மதன்.

இ‌ந்த பயிற்சி முகாம் வரு‌ம் 27-ந் தேதி (‌தி‌ங்க‌ட்‌கிழமை) தொடங்கி மே மாதம் 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. சென்னை மைலாப்பூர் சாய் வித்யாலயா மெட்ரிக்குலேஷன் பள்ளி வளாகத்தில் கார்ட்டூனிஸ்ட் மதன் நேரடியாக ஓ‌விய‌ப் பயிற்சி அளிக்கிறார்.

இந்த பயிற்சி வகுப்பு மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு, சேலம் ஆகிய மையங்களில் இருக்கும் மாணவர்களுக்கு வீடியோகான்பரன்சிங் மூலம் காண்பிக்கப்படும்.

வெளியூர் மாணவர்கள் கார்ட்டூன், ஓவியம் தொடர்பான சந்தேகங்களை வீடியோ-கான்பரன்சிங் வசதி மூலம் மதனிடம் நேரடியாக கேட்டு அறிந்து கொள்ளலாம். இத‌ன் மூல‌ம் தமிழகம் முழுவதும் சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் கார்ட்டூன் பயிற்சி பெற உள்ளனர்.

சாய் இன்பர்மேடிக்ஸ், இ-காசில் அகாடெமி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஐ.இ.சி.டி. நிறுவனம் ஆகியவற்றின் உதவியுடன் மதன் கார்ட்டூன் பயிற்சி பள்ளி (மாஸ்டர் ஒர்க்ஸ்) இந்த பயிற்சியை அளிக்கிறது.

இந்த பயிற்சி முகாமை தொடர்ந்து, பள்ளிகளில் ஓவியத்திற்கான தனிப் பாடத்திட்டத்தை உருவாக்கி பள்ளிக்கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் சமர்ப்பிக்க உள்ளதாகவும் மதன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்