கடலோரக் காவல்படையில் இளைஞர்களுக்கு வாய்ப்பு

இந்தியக் கடற்படையின் கடலோரக் காவல் பிரிவில் அசிஸ்டன்ட் கமாண்டன்ட் (Assistant Commandant) பணிக்காக இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தகுதிகள்: இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.07.1980ல் இருந்து 30.06.1989க்குள் பிறந்திருக்க வேண்டும். எஸ்.சி/எஸ்.டி மற்றும் ஓ.பி.சி. பிரிவினருக்கு அரசு விதிகளின் படி அதிகபட்ச வயது உச்சவரம்பில் சலுகை அளிக்கப்படும்.

நேவல் ஆர்க்கிடெக்சர்/மரைன் மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல்/ டெலிகம்யூனிகேஷன்& எலக்ட்ரானிக்ஸ்/ டிசைன்/ புரொடக்சன்/ ஏரோநாட்டிக்கல்/ கண்ட்ரோல் எலக்ட்ரிக்கல் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பி.இ. அல்லது பி.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும். கொல்கட்டா IMET நிறுவனத்தில் மரைன் இன்ஜினியரிங் படிப்பை முடித்தவர்களும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி என்ற விவரத்தை indiancoastguard.nic.in/indiancoastguard/jobs/jobs.html என்ற கடலோரக் காவல்படையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கடைசி தேதி: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை The Director (MPR&T), Post Box No. 127, Noida (U.P) - 201301 என்ற முகவரிக்கு ஜூன் 20ஆம் தேதிக்குள் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

வெப்துனியாவைப் படிக்கவும்