எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இலவச கணினி பயிற்சி திட்டம்

புதன், 8 ஜூலை 2009 (12:40 IST)
மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் சார்பில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான இலவச கணிணி பயிற்சி திட்டம் நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சென்னையில் உள்ள துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பயிற்சி மற்றும் வழிகாட்டுதல் மையம் சார்பில் இரண்டு பயிற்சித் திட்டங்கள் நடத்தப்பட உள்ளன. முதலாவதாக ஓராண்டுக்கான 'ஓ' லெவல் கனிணி பயிற்சியும், இரண்டாவதாக 11 மாத கால சிறப்பு பயிற்சியும் (கனிணி, தட்டச்சு, சுருக்கெழுத்து, பொது ஆங்கிலம், பொது விழிப்புணர்வு, மற்றும் கணிதம்) நடத்தப்படுகிறது.

ஓராண்டு கால கனிணி பயிற்சியில் சேர 12ம் வகுப்பிலும், 11 மாத கால சிறப்பு பயிற்சியில் சேர 10ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

இரண்டு பயிற்சிகளும் இலவசமாக நடத்தப்படுகிறது. அதோடு, 11 மாத பயிற்சி பெறுவோருக்கு பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.500 ஊக்கத்தொகை வழங்கப்படும்.

இதில் சேர விரும்புவோர் சாதி, கல்வி சான்றிதழ்கள் மற்றும் வேலை வாய்ப்பு பதிவு அட்டை ஆகியவற்றுடன், துணை பிராந்திய வேலை வாய்ப்பு அதிகாரி, எண் 56, சாந்தோம் நெடுஞ்சாலை, சென்னை-600 004 (மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலக வளாகம்) என்ற முகவரியில் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் : 2461 5112.

முதலில் வருவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்