அடுத்த மூன்றாண்டுகளில் 12,000 பணியாளர்களை சேர்க்க பெல் திட்டம்

வியாழன், 10 டிசம்பர் 2009 (14:01 IST)
மத்திய அரசு நிறுவனமான பெல் (பாரத மிகுமின் நிறுவனம்) அடுத்த 3 ஆண்டுகளில் புதிதாக 12,000 பணியாளர்களை நியமனம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவன உயரதிகாரி ஒருவர் இன்று தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான பெல், மேற்குவங்கத்தில் உள்ள கல்சாராபராவில் ரயில் இன்ஜின் உற்பத்தி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரயில்வே அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ளது. இதன் மூலம் தானியங்கி செலுத்து வாகனங்களை (self-propulsion vehicles) பெல் நிறுவனம் ரயில்வேத்துறைக்காக தயாரிக்க முடியும் என பெல் தலைவரும், நிர்வாக இயக்குனருமான பிரசாத ராவ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தற்போது 45 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் பெல் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும், வரும் 2012ஆம் ஆண்டுக்குள் இந்த எண்ணிக்கையை 52 முதல் 55 ஆயிரமாக அதிகரிக்க, அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலா 4 ஆயிரம் பணியாளர்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்